Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் கேரள வருகையொட்டி… கோவையில் டிரோன்கள் பறக்க தடை

கோவை: பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு, கோவையின் முக்கியமான பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. நாளை மதியம் 2 மணியளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார்.

கேரளாவில் சட்டசபை தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் மற்றும் பாஜக மாநில தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் NDA வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரிக்க பிரதமர் மோடி கேரளம் வர உள்ளார்.

பிரதமர் மோடி நாளை பாலக்காடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் NDA வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார். குறிப்பாக திருச்சூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர், ரோடு ஷோவிலும் பங்கேற்க உள்ளார்.இதையடுத்து பிரதமர் மோடியின் கேரளா வருகையை முன்னிட்டு, கோவையின் முக்கியமான பகுதிகளில் இன்று முதல் நாளை வரை(28-29) நீலாம்பூர், செட்டிபாளையம், எட்டிமடை, வாளையாறு, அவினாசி சாலை, பீளமேடு, காளப்பட்டி, போத்தனூர் மற்றும் ஈச்சனாரி ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை கோவை வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்ல உள்ளார்.

error: Content is protected !!