Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கஞ்சா, புகையிலை விற்ற 4 பேர் திருச்சியில் கைது…

கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்குள்ள தனியார் கல்லூரி அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த மில் காலனியைச் சேர்ந்த ஜெய் (எ) ஜனகிராமன் (வயது 47) என்பவரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புகையிலை விற்ற 3 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட காவல்துறை உத்தரவிட்டது. இதன்படி, திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரிகல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஹான்ஸ் விற்பனை செய்த கிரிகல்மேடு, வடக்குத் தெருவைச் சேர்ந்த அன்புச்செல்வன் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் 3 புகையிலை விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நவல்பட்டு போலீசார், சூரியூர் கட் ரோடு பகுதியில் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்றதாக உறையூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரிபிரசாத் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், கல்லக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விரகாலூர் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 45 ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக லால்குடி தாலுகா, விரகாலூர் தெற்குத் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (வயது 75) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமிருந்தும் மொத்தம் 54 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

error: Content is protected !!