Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ரூ.8,000 கூப்பன் .. திமுக தேர்தல் அறிவிப்பு

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியானது. ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு பெரும் பலமாக அமைந்து வரும் திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த தேர்தலிலும் திமுகவின் தேர்தல் அறிக்கையே முக்கிய பேசுபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவது பல்வேறு தரப்பினரிடம் கலந்தாலோசித்து திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ளேன். எந்த மாநில அரசும் இந்தளவுக்கு மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியதில்லை. தமிழ்நாட்டை கெடுக்க நினைக்கும் கூட்டம்தான் திமுகவை எதிர்க்கிறது. கடந்த 5 ஆண்டுகளின் சாதனைகளை விஞ்சும் வகையில் திராவிட மாடல் 2.0 இருக்கும். பாஜக சதியை முறியடித்து மகளிருக்கு ரூ.5,000 வழங்கினோம். முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக தேர்தல் அறிக்கையில்;

இல்லத்தரசி திட்டத்தின் கீழ் ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். டிவி, பிரிட்ஜ், வாசிங் மெசின் உள்ளிட்டவற்றை கூப்பன் மூலம் வாங்கலாம்

📌 5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிகணினிகள் வழங்கப்படும்

📌 நான் முதல்வன் திட்டத்தில் ரூ.1500 மாத உதவித் தொகையுடன் பயிற்சி

📌 அனைத்து மாவட்டங்களிலும் நியோ டைட்டல் பூங்கா

📌 ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு 50 லட்சம் வேலைவாய்ப்பு

📌 தமிழ்நாட்டின் ஏற்றுமதி 120 பில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை

📌 தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி ரூ.5 லட்ச கோடியாக உயர்த்தப்படும்

📌 5,000 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்படும்

📌 1,000 கிராம கோவில்கள் மறுசீரமைக்கப்படும்

📌 சிறுபான்மையினருக்கான தொழில்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்

📌 கிராம சாலைகள் ரூ.10,000 கோடியில் சீர் செய்யப்படும்

📌 மாநகராட்சி, நகராட்சிகளில் 50 புதிய செம்மொழி பூங்காக்கள்

📌 திருச்சி, மதுரை, சேலம், கோவை அருகே நவீன வசதிகளுடன் கூடிய நகரங்கள் உருவாக்கப்படும்

📌 5 ஆண்டுகளில் 10,000 புதிய பேருந்துகள் இயக்கப்படும்

📌 தொழிற்சாலைகளுக்கு செல்லும் மகளிருக்கு உதவ 1000 குழந்தைகள் காப்பகங்கள்

📌 BC, MBC பிரிவினர் தொழில் கடன் பெறும் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும்

📌 மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை வசதிகள்

📌தமிழ்நாட்டில் 10 கைத்தறி பூங்காக்கள் அமைக்கப்படும்

📌 ஊரகப்பகுதிகளில் 10,000 புத்தொழில்கள் தொடங்கப்படும்

📌 மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் புதிதாக அமைக்கப்படும்

📌 அனைத்து அரசு கலைக்கல்லூரிகளில் டிஜிட்டல் கற்றல் மையங்கள்

📌 அனைத்து தொகுதிகளிலும் முதல்வர் படைப்பகங்கள்

📌 பெண்கள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை வாங்கலாம்

📌 வருமான வரி செலுத்தாத மகளிர் இல்லத்தரசி திட்டத்தில் பயனடையலாம்

📌 வட மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு வளர்ச்சி திட்டங்கள்

📌 மேற்கு மாவட்டங்களில் தொழில் புரட்சியை உறுதி செய்ய புதிய திட்டம்

📌 தென் மாவட்டங்களிலும் சிறப்பு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

📌 ரூ.20,000 கோடியில் மண்டல வாரியாக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்

error: Content is protected !!