கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பணப்பட்டியை சேர்ந்தவர் ராக்கிமுத்து இவரது மனைவி சாந்தி 41. நெகமம் அருகே உள்ள ஆண்டிபாளையத்தை சேர்ந்த லோகநாதன் என்பவரது மனைவி தமிழரசி வயது (25) . இவர்கள் இருவரும் பங்குதாரர்களாக சேர்ந்து பணப்பட்டி அருகே உள்ள
ஒத்தக்கலியன்காடு பகுதியில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் இன்று இருவரும் கோழிப் பண்ணையை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது மின் மோட்டார் மூலம் ஸ்பிரே GUN னைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சி
அடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தபோது இருவரும் மயங்கிய நிலையில் இருந்தனர்.
பின்னர் அங்கிருந்து அவர்கள் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இருவரின் உடல்களை மீட்டு பீரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சம்பவம் குறித்து நெகமம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மின்சாரம் தாக்கி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

