Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் பிளாஸ்டிக் கழிவுகளில் இரை தேடும் பறவைகள்

இரை தேடி வந்த இடத்தில் எமனைத் தின்னும் பரிதாபம் : இறக்கைகளை நசுக்கும் மனிதனின் அலட்சியம் – சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வீடியோ காட்சி !!!

கோவை, உக்கடம் பகுதியில் பதிவான அந்த ஒரு நிமிட வீடியோ, ஒட்டுமொத்த கோவைவாசிகளின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்து உள்ளது.

இரை தேடி வந்த பறவைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்களுக்கு இடையே உணவு கிடைக்காமல் தவிப்பதும், பிளாஸ்டிக் கழிவுகளையே கொத்திப் பார்ப்பதுமான அந்த வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

“நாம் வீசும் ஒரு பை, ஒரு ஜீவனின் உயிரைப் பறிக்கிறது” என சமூக ஆர்வலரின் எடுத்த அந்த வீடியோ பதிவு திடக்கழிவுகளால் சுற்று சூழலியல் முற்றிலும் சீர்குலைந்து உள்ளதை இந்த வீடியோ ஒரு சாட்சியாக நிறுவுகிறது.

இது வெறும் வீடியோ பதிவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி.

மாநகராட்சி நிர்வாகம் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாத வரை இந்த ஜனங்களின்’ மரண ஓலத்தைத் தடுக்க முடியாது என்பதே கசப்பான உண்மை.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, உக்கடம் பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து உள்ளது.

error: Content is protected !!