திருச்சி பெரிய கடை வீதி பகுதி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 46) ஆட்டோ டிரைவர். நேற்று இவர் தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றுக்கொண்டு
ஓடத்துறை காவிரி பாலம் அருகில் இறக்கிவிட்டு மீண்டும் ஆட்டோவை ஓட்டி வரும் பொழுது திடீரென்று ஆட்டோ நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் மணிகண்டன் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

