Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிக பணம் வாங்கிய தனியார் நிறுவனம்.. ரூ. 1லட்சம் அபராதம்..

திருச்சி இபி ரோடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கடன் நிறுவனத்தில் தனது வீட்டின் மேல் மாடி கட்ட முடிவு செய்து கடன் நிதி உதவி பெற விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து ஆவணங்களை பெற்றுக் கொண்ட நிறுவன கடன் அதிகாரி பல்வேறு பணிகளுக்கு ரூ 41,800 பணத்தை கூகுள் பே மூலம் பெற்றுள்ளார். பின்னர் கடன் பாபுவுக்கு கிடைத்தது. இதையடுத்து தற்செயலாக லோன் அக்கவுண்ட் ஸட்டேட்மெண்ட் பெற்று பார்த்த போது கடன் வழங்கும் அதிகாரி ஜிபேயில் பெற்ற தொகை அனைத்தும் கடன் கணக்கில் சேர்க்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து விசாரித்த போது அது உங்களுக்கும் கடன் அதிகாரிக்கும் இடையேயான தனிப்பட்ட விவகாரம் என கடன் நிறுவன அதிகாரி பதில் அளித்துள்ளர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பாபு திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைவர் சேகர் தலைமையிலான நுகர்வோர் நீதிமன்றம் அந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர் செய்த மோசடிக்கு நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றதுடன், பாபுவிடம் பெற்ற ரூ.41,800 பணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்றும், ரூ.1 லட்சம் மன உளைச்சலுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், மேலும் வழக்கு செலவுத் தொகையாக 10, ஆயிரம் வழங்க வழங்கவும் உத்தரவிட்டது. மனுதாரருக்காக வழக்கறிஞர் ஜெகன் ஆஜராகிராகி வாதிட்டார்.

error: Content is protected !!