Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 குறைவு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் தொடுத்திருப்பதன் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. அதுவரையில் கடுமையாக உயரந்து வந்த தங்கத்தின் விலை, இந்த போர் தொடங்கியதும் அப்படியே குறைய தொடங்கியது. பொதுவாக, இதுபோல போர் சூழல் ஏற்பட்டால் தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும். ஆனால், மேற்காசிய போர் இதனை தலைகீழாக மாற்றியது.
இதற்கு காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான். போரின் விளைவாக ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்தது. இதனால் தங்கத்தின் மீதான தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்ற முதலீட்டாளர்கள், அதனை கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்தனர். இதுவே தங்கம் விலை குறைய காரணமாக இருந்தது.
நேற்று (ஏப்.08) ஒரு கிராம் ரூ.14,200க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,000க்கும், சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கும் விற்கப்படுகிறது.

error: Content is protected !!