தஞ்சை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண் இராமநாதன் வீடு, வீடு சென்று துண்டு பிரசுரம் கொடுத்து வாக்கு கேட்டார் அப்போது மூதாட்டி ஒருவர் ஆரத்தழுவி நெற்றியில் திருநீறு பூசி வாழ்த்தினார்.
பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் சண் இராமநாதன் போட்டியிடுகிறார்.

தஞ்சை மாநகராட்சி 32 , 33, 34, ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட வண்டிக்கார தெரு, வெட்டுக்கார தெரு சிவராயர் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் சண் இராமநாதன் வீடு வீடாக சென்று சின்னம் அச்சிட்ட துண்டு பிரசுரத்தை வழங்கி வாக்கு கேட்டார்
ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
மூதாட்டி ஒருவர் வேட்பாளர் சண் இராமநாதனை ஆரத் தழுவி நெற்றியில் திருநீறு பூசி வாழ்த்தினார்.
பின்னர் திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்கு கேட்டு சென்றார்.
வாகனத்திற்கு முன்பாக பேன்ட் வாத்தியங்கள் இசையுடன் கூட்டணி கட்சி தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் அணி வகுத்து சென்றனர்.
