மோடியை மகிழ்விக்க மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள் என பவன் கல்யாணை பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டை தடுத்துவிட்டதாக பவன் பதிவிட்டதற்கு, இம்மசோதா 2023-லேயே நிறைவேற்றப்பட்டதாகவும், இதுபற்றி விவாதிக்க தயார் எனவும் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். உங்களை DCM ஆக்கிய ஆந்திர மக்களின் சுயமரியாதையையும் மாநில உரிமையையும் விற்றுவிடாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.
