Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் இன்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட பிஎம்எஸ் சார்பில்
லேபர் கோடில் உள்ள தொழிலாளர்களுக்கு எதிரான சரத்துகளை நீக்க வேண்டும்.
இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்திலிருந்து ரூபாய் 7500 ஆக
உயர்த்தி அதற்கு அகவிலைப்படி வணங்குவதோடு ஓய்வூதியதாரர்களை ஆயுஸ்மான் பாரத் மருத்துவ திட்டத்தில் இணைக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய மஸ்தூர்
சங்க மாவட்ட தலைவர் திவாகர் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் பாஸ்கர்,மாவட்ட அமைப்புச் செயலாளர் அம்பேத் சாக்ரடீஸ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் மாநில பொதுச் செயலாளர் சங்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
பாரதிய மஸ்தூர் சங்க ஒஎப்டி பொதுச் செயலாளர் வடிவேல் ஹெச் ஏ ஏ பி பொதுச் செயலாளர் குரு மற்றும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!