புதுக்கோட்டை இலுப்பூரில் நடைபயிற்சி மேற்கொண்டபடி ஓட்டு சேகரித்த பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. சிறப்பாக இருக்கிறது.இபிஎஸ் தோல்வியின் உச்சத்தில் போய்விட்டார். அதனால் விரக்தியில் பேசுகிறார். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எந்த பேர் வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணியை வெல்ல முடியாது. என்ன செய்தாலும் அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
அதிமுக டில்லியில் அடமானம் ஆகிவிட்டது. குத்தகைக்கு போய்விட்டார்கள். அவர்கள் அடிமை ஆகிவிட்டார்கள். அதனால் டில்லி தான் ஆட்சி நடத்துகிறது. திராவிட கட்சிகள் இப்படி போனதற்கு வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். யார் வந்தாலும் நாங்கள் கவலைப்படவில்லை. எங்கள் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறோம்.
இப்பொழுது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால், மக்களின் எழுச்சியைப் பார்த்தால் 234 தொகுதிகளும் வந்துரும் போலிருக்கு.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
