Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்க போகிறது.. பிரதமர்

டில்லி: மகளிர் இடஓதுக்கீடு மசோதா நம் நாட்டிற்கு ஒருபுதிய திசையை காட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார். 131-ஆவது சட்ட திருத்தம், தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு மசோதாக்களை ஆதரித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, அதிமுக்கியத்துவம் வாய்ந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்பதை தாம் பாக்கியமாக கருத்துவதாக கூறினார்.

இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 மசோதாக்களும் எனது அரசு, நாட்டின் வளர்ச்சியில் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை பறைசாற்றும். புதிய வரலாறு படைக்க நாடாளுமன்றத்திற்கு பொன்னான நாள் என்றார். மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்த கட்சிகளை பெண்கள் தண்டித்து உள்ளனர். இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வரலாறு நம்மை நினைவு கொள்ளும்.

நம் நாட்டின் மக்கள் தொகையில் சரி பாதி உள்ளவர்களுக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கும் தருணம் இது. எனவே மசோதாக்களை அரசியல் பிரச்சனையாக பார்க்க வேண்டாம், , அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!