தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் சென்ற ஹெலிகாப்டரில் உதகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கணக்கில் வராத பணம், பரிசுப் பொருட்கள் அல்லது வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய பொருட்கள் ஏதேனும் கொண்டு வரப்படுகிறதா என்பதை உறுதி செய்ய இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
குஷ்பு தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக குறிப்பிட்ட பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்தார்.
அவர் தரைஇறங்கிய உடனே, அங்கு தயாராக இருந்த தேர்தல் பறக்கும் படையினர் ஹெலிகாப்டருக்குள் ஏறி சோதனையிட்டனர்.
