Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓட்டுக்கு 1000 வழங்கிய கிருஷ்ணராயபுரம் அதிமுக .. 2 பேர் கைது

கிருஷ்ணராயபுரம் அதிமுக வேட்பாளர் மருத்துவர் திவ்யா விற்கு மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என வீடு, வீடாக சென்று பணம் கொடுத்து கொண்டு இருந்த இரண்டு பேர் கைது.

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறும் நிலையில், வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர்.திவ்யா பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் அதே ஊரைச் சேர்ந்த அதிமுகவினர் கதிர்வேல், யுவராஜ் என இருவர்கள், வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என வீடு, வீடாகச் சென்று வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கையின் படி பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை பார்த்தவர்கள் தேர்தல் அலுவலருக்கு புகார் கொடுத்துள்ளனர்.

புகாரின் படி கிருஷ்ணராயபுரம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் கொடுத்து கொண்டு இருந்த கதிர்வேல், யுவராஜ் என இருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் மேட்டு திருக்காம்புலியூர் பகுதி முழுவதுமாக பணம் பட்டுவாடா செய்த பின் 10 வீடு மட்டும் மீதி இருந்த நிலையில் அவர்கள் பிடிபட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து பல லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்து பின்னர் இருவரையும் மாயனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!