Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாடு அணிக்கும் – டெல்லி அணிக்கும் இடையிலான போட்டி!” – உதயநிதி ஸ்டாலின் கரூரில் பேச்சு

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் திமுக இளைஞரணி செயலாளர், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். கரூர் தொகுதி வேட்பாளர் தியாகராஜன் மற்றும் அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ ஆகியோரை அறிமுகம் செய்துவைத்து தொண்டர்கள் மத்தியில் உதயநிதி பிரச்சாரம் செய்தார்.கரூர் மாவட்டத்தின் எழுச்சியை பார்க்கும்போது மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது நாம் தான் என்பது தெரிகிறது. கலைஞரையும் கரூரையும் பிரித்துப் பார்க்க முடியாது. ஏனென்றால் கரூர் மாவட்டம், குளித்தலையில் தான் முதன் முதலில் கலைஞர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு 5000 கோடி அளவிற்கு திட்டங்களை வழங்கி இருக்கிறோம்.வெண்ணைமலை கோவில் இனாம் நில பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவின் பொய் பிரச்சாரங்களை நம்பாதீர்கள்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி அதிமுகவும், பாஜகவும் நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், தேர்தலுக்கு முன்பாகவே கோடைகால சிறப்பு நிதியும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் முதல்வர் வழங்கினார். மீண்டும் திமுக ஆட்சி அமைக்க போவது உறுதி. மீண்டும் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க போவது உறுதி. சசிகலா காலில் விழுந்து தான் எடப்பாடி முதல்வராக ஆனார்.

அதனால் தான் திரும்பத் திரும்ப நான் சொல்கிறேன். எடப்பாடி 1ஆம் நம்பர் அடிமை என்று (புகைப்படத்தை காட்டி) கடுமையாக விமர்சனம்.தமிழகத்தில் அடிமை கூட்டத்தையும், சங்கி கூட்டத்தையும் விட்டுவிடக்கூடாது. இந்த தேர்தலில் தமிழ்நாடு அணிக்கும், டெல்லி அணிக்கும் தான் போட்டி என்றார்.

error: Content is protected !!