நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரேவை காயத்துடன் விளையாட வைத்ததை முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளாசியுள்ளார். ரிட்டயர்டு ஹர்ட் மூலம் அவரை வெளியே அனுப்பிவிட்டு, வேறொரு வீரரை விளையாட வைத்திருந்தால், கடைசியாக கூட அவரால் வந்து போட்டியை வெற்றிக்கு அழைத்துச்சென்றிருக்க முடியும். அந்த வாய்ப்பையும் தவறவிட்ட சிஎஸ்கே அணி, காயத்தோடு அவரை விளையாட வைத்தும் பெரிய தவறு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி அபிஷேக் சர்மா, கிளாஸனின் அரைசதங்களின் உதவியால் 194 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே 10 ஓவரில் 111 ரன்கள் அடித்தபிறகும் வெற்றிபெறவேண்டிய இடத்திலிருந்து 10 ரன்னில் தோற்று அதிர்ச்சி கொடுத்தது. ஆயுஸ் மாத்ரேவின் காயம் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “ஆயுஷ் மத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே, முழங்காலில் கட்டுடன் தான் வந்தார். அது தசைப்பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவர் கடந்த போட்டிகளில் ஃபீல்டிங் செய்யவே இல்லை. வீரர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் அதை தொடர்ந்து கண்காணித்து உடனடியாக சரிசெய்யவேண்டும், அதுதான் இஞ்சூரி மேனேஜ்மெண்ட்டின் வேலை.
ஆயுஸ் மாத்ரேவின் காயம் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “ஆயுஷ் மத்ரே பேட்டிங் செய்ய வரும்போதே, முழங்காலில் கட்டுடன் தான் வந்தார். அது தசைப்பிடிப்பாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அவர் கடந்த போட்டிகளில் ஃபீல்டிங் செய்யவே இல்லை. வீரர்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் அதை தொடர்ந்து கண்காணித்து உடனடியாக சரிசெய்யவேண்டும், அதுதான் இஞ்சூரி மேனேஜ்மெண்ட்டின் வேலை.
