பழ வியாபாரியை தாக்கிய 2 வாலிபர்கள்..
திருச்சி லால்குடி வாளாடி குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர்
விவேக் ( 28). பழக்கடை வைத்துள்ள இவர் அகலங்கநல்லூர் கிரீன் நகர் பகுதியில் சென்றபோது அகலங்கநல்லூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரி ராஜன் (22) ஆகாஷ் (23) ஆகிய இரண்டு பேரும் அவரிடம் குடிபோதையில் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது இதில் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு இலால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் விவேக் கொடுத்த புகாரின் அடிப்படையில் லால்குடி போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் முதியவர் பலி
திருச்சி மணச்சநல்லூர் சிறுகாம்பூர் செட்டியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 64)
இவர் தனது மோட்டார் சைக்கிளில் சோழங்கநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சீனிவாசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சீனிவாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . எதிரே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மணச்சநல்லூர் சோழங்கநல்லூர் கிழக்கு குடித்தெரு பகுதியைச் சேர்ந்த இளையராஜாவும் (33 ) தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார் அவரை சமயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக சீனிவாசனின் மகன் நாகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி இவரது பேரன் ரஞ்சித்குமார் (25) கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது.
காலப்போக்கில் போதைக்கு அடிமையான ரஞ்சித் குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றினார். இதனால் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் குடிபோதையில் தாத்தாவிடம் தகராறு செய்துவிட்டு
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சித் தனது வேட்டியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாத்தா கிருஷ்ணசாமி துவாக்குடி போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
