தற்போதைய சமூக ஊடக காலத்தில், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை செல்பி எடுத்தோ அல்லது வீடியோ வாகவோ சமூகவலை தளங்களில் பகிரும் போக்கு அதிகரித்துள்ளது. ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தும்போது படம் பிடிப்பது 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 128ன் படி கடும் குற்றமாகும்.
வாக்குப்பதிவு ரகசியத்தை மீறும் வகையில் செயல்படும் நபர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறை அல்லது அபராதம், அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படலாம் விதிமுறைகளை மீறுபவர்களை எதிர்காலத் தேர்தல்களில் வாக்களிக்க முடியாதபடி தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.
இருப்பினும், ஆர்வக்கோளாறால் சட்டச்சிக்கலில் சிக்காமல் இருக்க, வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன், கேமரா மற்றும் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விரலில் இடப்பட்ட மையைக்காட்டி பெருமையுடன் படம் எடுக்க விரும்பு வோர், வாக்குச் சாவடிக்கு வெளியே வந்து அதைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
