நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த பெரும்பத்து கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க அதிரடி முடிவெடுத்துள்ளனர்.இரட்டைக் கொலைக்கு நீதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மார்ச் 3 ல் பெரும்பத்து கிராமத்திற்கு டூவீலரில் வந்த 7 பேர், ரோட்டோரம் இருந்த இருவரை வெட்டிக் கொலை செய்தனர்.இந்த
சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியது. ஆனால், இந்தத் துயரம் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், தமிழக அரசிடமிருந்து எவ்வித முறையான கண்டனமோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலோ வரவில்லை என்பது மக்களின் முதன்மையான குமுறலாக உள்ளது.ஒரு மாவட்டத்தில் இவ்வளவு பெரிய சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்ட பின்பும், மாவட்ட ஆட்சியர் இதுவரை நேரில் வந்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்குமோ என்று மக்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலைக்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்து கூறப்படவில்லை என்பன உள்ளிட்ட கிராம மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை எனக்கூறி சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.கிராமத்தின் நுழைவாயிலில் தேர்தல் புறக்கணிப்பு குறித்து அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. ஊருக்குள் கருப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை.
இந்நிலையில் இரட்டைக் கொலைக்கு நீதி கேட்டு தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு மொத்தம் உள்ள 969 வாக்காளர்களில் இதுவரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 10.30 மணி நிலவரப்படி நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் உள்ள 290வது பூத்தில் 969 வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
