Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சையில் கிறிஸ்துவர்கள்-இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு பழரசம்-நீர்மோர் வழங்கல்

தஞ்சையில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் இணைந்து பெருவுடையார் கோவில் திருத்தேரோட்டம் காண வந்த பக்தர்களுக்கு பழரசம், நீர் மோர் வழங்கி தாகத்தை தீர்த்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தஞ்சை பெருவுடையார் திருக்கோவில் சித்திரை பெருவிழா திருத்தேர் நிலையில் இருந்து புறப்பட்டு ராஜ வீதிகளில் வலம் வருகிறது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரோட்டம்

காண திரண்டு உள்ளனர். கடுமையான வெயில் நிலவி வருவதால் பக்தர்களின் தாகத்தை தீர்க்க தஞ்சை தெற்கு வீதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து நீர்மோர் பானகம்

பழ ரசம் ஆகியவை வழங்கி வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நீர் மோர் வாங்கி பருகி செல்கின்றனர். சாதி மதம் மொழி கடந்து மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

error: Content is protected !!