மே 4ம் தேதி காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார். 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
