தென்னிலை அருகே பழுதாகி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டாட்டா ஏசி வாகனம் மோதி விபத்து – சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் காயம்.
கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரம் பகுதியிலிருந்து கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர் மலை கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்

தவர்கள் டாட்டா ஏசி வாகனத்தில் அதிகாலை 6.30 மணி அளவில் தென்னிலை அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது டாட்டா ஏசி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்பாராதவிதமாக பழுதாகி ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டாட்டா ஏசியில் பயணம் செய்த செல்வகுமார் 30, ஜீவா ராஜ் 38, செல்வராஜ் 58, ஆனந்தகுமார் 41, ஜீவா 21, லட்சுமி 46, கற்பகம்45, திவ்யா பிரியா 30, ஹரிப்பிரியா 30, தக்ஷனா 15, அமுதா 55, தாரிகா 9, சொஸிகா 4, என 4 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் என ஒரே

குடும்பத்தைச் சார்ந்த 13 பேர் காயமடைந்தனர்.
இதில் ஜெயக்குமாருக்கு கை முறிவு ஏற்பட்டது அதேபோன்று மற்ற 13 நபர்களும் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தென்னிலை காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
