Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாலிபர் மீது சரமாரி தாக்குதல்.. 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்

வாலிபர் மீது சரமாரி தாக்குதல் ; 4 பேர் கைது

திருச்சி ராம்நாத் எம் ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 18). இவர் தாராநல்லூர் கல்மந்தை காலனி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வாட்டர் டேங்க் அருகில் உட்கார்ந்திருந்தார் அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த வீரா ராஜா (29), அலங்காராஜ் (25), தினேஷ் ( 24 ), சுரேஷ்குமார் (24) ஆகியோர் சஞ்சயிடம் தகராறில் ஈடுபட்டனர்.இதனால் சஞ்சய்க்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் சஞ்சய்யை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த சஞ்சய்யை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்

காதலை கண்டித்த காதலியின் தந்தை மீது தாக்குதல்

திருச்சி சங்கிலியாண்டபுரம் ஜின்னா தெருவை சேர்ந்தவர் ஜோஸ்வா, (வயது 50). இவரது மகள் திருச்சி பாலக்கரை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த அஜய்ராஜ் (26) என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது இதை அறிந்த ஜோஸ்வா நேற்று முன்தினம் அஜய்ராஜை கண்டித்துள்ளார் இதில் ஆத்திரம் அடைந்த அஜய்ராஜ் ஜோஸ்வாவை தகாத வார்த்தைகள் திட்டி கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார் இதில் காயம் அடைந்த ஜோஸ்வாவை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது..

திருச்சி மில் காலனி கோனார் குளம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சுமதி (வயது 62) என்பவரை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 220 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!