Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி: கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி தற்கொலை

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் சபாபதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஹரிதாஸ் ( 18 ). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ஹரிதாஸ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!