Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜபல்பூர் படகு விபத்து: திருச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி – இன்று இரவு திருச்சி வரும் உடல்கள்

மத்­தி­ய­பி­ர­தேச மாநி­லம் ஜபல்­பூர் மாவட்­டத்­தில் பார்கி அணை உள்­ளது. நர்­மதா ஆற்­றின் குறுக்கே கட்­டப்­பட்­டுள்ள இந்த அணை­யில் சுற்­றுலா பய­ணி­க­ளுக்­காக பட­கு­கள் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்த அணை­யில் நேற்று முன்­தி­னம் ஒரு சொகுசு பட­கில் 40 சுற்­றுலா பய­ணி­கள் சவாரி செய்­த­னர்.

படகு அணை­யின் நடுப்­ப­கு­தி­யில் சென்­ற­போது திடீ­ரென கவிழ்ந்­தது. இதில் பட­கில் இருந்த அனை­வ­ரும் நீரில் விழுந்து தத்­த­ளித்­த­னர். தக­வல் அறிந்து விரைந்த மீட்பு படை­யி­னர், சுற்­றுலா பய­ணி­களை மீட்­கும் முயற்­சி­யில் தீவி­ர­மாக ஈடு­பட்­ட­னர். சிறிது நேரத்­தில் தண்­ணீர் புகுந்து படகு மூழ்­கி­யது. நேற்று முன்­தி­னம் நடந்த மீட்­பு­ப­ணி­யில் 4 பேர் சட­ல­மாக மீட்­கப்­பட்டனர். 15 பேரை உயி­ரு­டன் மீட்­ட­னர். மாய­மா­ன­வர்­களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வந்­தது.இந்த சூழ­லில் நேற்று மேலும் 5 பேரின் உடல்­கள் மீட்­கப்­பட்­ட­தால் பலி எண்­ணிக்கை 9 ஆக உயர்ந்­தது.

மூழ்­கிய பட­கில் இருந்து அவர்­க­ளின் உடல்­கள் வெளியே கொண்­டு­வ­ரப்­பட்­டன. ஒரு தாய், தனது குழந்­தையை கட்­டி­ய­ணைத்த நிலை­யில் இறந்து கிடந்­தது பார்ப்­ப­வர்­களை கண்­க­லங்க செய்­தது. இது­வரை 28 பேர் மீட்­க ப்­பட்­டு­விட்ட நிலை­யில் தேடு­தல் பணி தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.இந்­நி­லை­யில் இந்த விபத்­தில் தமி­ழ­கத்­தைச் சேர்ந்த 5 பேர் பரி­தா­ப­மாக இறந்த அதிர்ச்சி தக­வல் கிடைத்­து ள்­ளது. அது­பற்­றிய உருக்­க­மான தக­வல்­கள் வரு­மாறு:-திருச்சி திரு­வெ­றும்­பூர் அருகே உள்ள நவல்­பட்டு பகு­தியை சேர்ந்­த­வர் காம­ராஜ் (38). இவர் மத்­தி­ய­பி­ர­தே­சத்­தில் உள்ள துப்­பாக்கி தொழிற்­சா­லை­யில் பணி­யாற்றி வந்­தார். இவ­ரு­டைய மனைவி கார்­கு­ழலி (38). இந்த தம்­ப­தி­யின் மூத்த மகன் புவிந்­தி­ரன் (11), இளைய மகன் தமிழ்­வேந்­தன் (5) காம­ரா­ஜின் மைத்­து­ன­ரான திருப்­பூர் தாரா­பு­ரத்தை சேர்ந்த வேந்­தன், அவ­ரு­டைய மனைவி சவு­பாக்­கி­ய­வதி மற்­றும் அவர்­க­ளு­டைய மகள் என 7 பேர் மத்­தி­ய­பி­ர­தேச மாநி­லம் ஜபல்­பூ­ரில் உள்ள பார்கி அணைப்­ப­கு­தி­யில் படகு சவாரி சென்­ற­னர்.

அப்­போது எதிர்­பா­ரா­த­வி­த­மாக படகு கவிழ்ந்­த­தில் காம­ராஜ், அவ­ரது மனைவி கார்­கு­ழலி, இளைய மகன் தமிழ்­வேந்­தன், சவு­பாக்­கி­ய­வதி, அவ­ரது மகள் ஆகிய 5 பேர் பரி­தா­ப­மாக இறந்­த­னர். மற்­ற­வ ர்­க­ளின் நிலைமை என்­ன­வென்று தெரி­ய­வில்லை.திருச்சி மாவட்­டம் திரு­வெ­றும்­பூர் அருகே உள்ள நவல்­பட்டு அண்ணா நகரை சேர்ந்த காம­ராஜ் அவ­ரது மனைவி கார்­கு­ழலி அவ­ரது இளைய மகன் தமிழ் வேந்­தன் மற்­றும் அவ­ரது அண்ணி அன்­னி­யின் குழந்தை என ஐந்து பேர் தண்­ணீ­ரில் மூழ்கி மாய­மா­ன­தா­க­வும் இதில் புவீந்­ரன் உட்­பட இரண்டு குழந்­தை­கள் லைஃப் ஜாக்­கெட் போட்­ட­தால் காப்­பாற்­றப்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­ கி­றது. இந்த நிலை­யில் காம­ராஜ் கார்­கு­ழலி மற்­றும் அன்­னி­யின் உடலை மீட்பு படை­யி­னர் மீட்டு உள்­ள­னர். காம­ராஜ் மற்­றும் இரண்டு குழந்­தை­க­ளின் உடல்­கள் இன்­னும் கிடைக்­க­வில்லை என கூறப்­ப­டு­கி­றது. இந்த நிலை­யில் இச்­சம்­ப­வம் பற்றி தக­வல் கிடைத்­த­தும் அவ­ரது குடும்­பத்­தி­னர் விமா­னத்­தில் மத்­திய பிர­தே­சம் சென்­றுள்­ள­னர்.இதற்­கி­டை­யில் துப்­பாக்கி தொழிற்­சாலை சேர்ந்த அவ­ரது நண்­பர்­கள் திருச்சி துப்­பாக்கி தொழிற்­சாலை மூலம் அவர்­க­ளது உடலை விரைந்து மீட்டு திருச்­சிக்கு கொண்டு வரு­வ­தற்கு உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­வ­தற்கு வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

தண்­ணீ­ரில் மூழ்கி மாய­மாகி உள்ள காம­ராஜ் மற்­றும் இரண்டு குழந்­தை­க­ளின் உடல்­களை மீட்­ப­தற்கு திருச்சி எம்பி துரை வைகோ மூலம் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தொழிற்­சங்­கத்­தி­னர் முயற்சி மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். இச்­சம்­ப­வம் நவல்­பட்டு அண்ணா நகர் துப்­பாக்கி தொழிற்­சாலை பொது­மக்­க­ளி­டையே பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.இந்­நி­லை­யில் படகு கவிழ்ந்த விபத்­தில் உயி­ரி­ழந்த திருச்சி நவல்­பட்டு கார்­கு­ழலி மற்­றும் திருப்­பூர் தாரா­பு­ரம் செள­பாக்­கியா ஆகிய இரு­வ­ரின் உடல்­கள், சிறப்பு விமா­னத்­தில் இன்று திருச்­சிக்கு வர­வுள்­ளது.சிறப்பு விமா­னத்­தில் ஒரு உடல் மட்­டுமே கொண்­டு­வ­ர­மு­டி­யும் என்­ப­தால், ஒரு உட­லு­டன் முதல் விமா­னம் இன்று இரவு 8:30க்கு திருச்சி வந்­து­சே­ரும் என்­றும், அத­னைத்­தொ­டர்ந்து அடுத்த உடல் அடுத்த விமா­னத்­தில் இன்று இரவே வரும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்று திருச்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் துரை வைகோ தெரி­வித்­துள்­ளார்டெல்­லியை சேர்ந்த சங்­கீதா கோரி என்­ப­வர் இந்த விபத்­தில் உயி­ரு­டன் மீட்­கப்­பட்­டார். அவர் கூறும்­போது, “நாங்­கள் டெல்­லி­யில் இருந்து 6 பேர் சபல்­பூரை சுற்­றிப் பார்க்க வந்­தோம். பயங்­க­ர­மான காற்­றால் படகு தள்­ளா­டி­ய­போ­து­தான் பய­ணி­கள் உயிர்­காப்பு உடையை தேடி அணிந்­த­னர். அது­வரை படகு பணியா­ளர்­கள் அவற்றை மறை­வான இடத்­தில் வைத்­தி­ருந்­த­னர். அத­னால் பல­ருக்கு உயிர்­காக்­கும் கவ­சம் கிடைப்­ப­தில் குழப்­பம் ஏற்­பட்­டது. அதற்­குள் பட­குக்­குள் தண்­ணீர் வந்­தது.

படகு கவிழ்ந்­த­தால் எனது குடும்ப உறுப்­பி­னர்­களே தண்­ணீ­ருக்­குள் மாய­மா­னார்­கள். இப்­போது நாங்­கள் 3 பேர் தப்­பி­யி­ருக்­கி­றோம். ஒரு­வர் இறந்­து­விட்­டார். இன்­னும் எங்­கள் குடும்­பத்தை சேர்ந்த 2 பேரை காண­வில்லை.முன்­னெச்­ச­ரிக்­கை­யாக செயல்­ப­டா­த­தும் அலட்­சி­ய­முமே இந்த துயர சம்­ப­வத்­துக்கு கார­ணம். உள்­ளூர்­வா­சி­கள் கரை­யில் இருந்து கூச்­ச­லிட்டு படகை பாது­காப்­பாக செலுத்த பட­கோட்­டிக்கு சைகை செய்­த­னர். ஆனால் பட­கோட்டி அனு­ப­வம் இல்­லா­த­வர்­போல செயல்­பட்­டார். சரி­யான நேரத்­தில் படகை திசை திருப்பி இருந்­தால் இந்த சம்­ப­வம் நடந்­தி­ருக்­காது” என்று அவர் கண்­ணீ­ரு­டன் கூறி­னார்.

error: Content is protected !!