Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் சோகம்! மனைவியுடன் தகராறு செய்த நபர் வீட்டில் சடலமாக மீட்பு

திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (56) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 1- ந்தேதி வழக்கம் போல் சரவணன் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் சரவணன் கீழே விழுந்து தலையில் அடிபட்ட நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆம்புலன்சில் வந்த செவிலியர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்துதிருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!