Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய்க்கு அமமுக ஆதரவு?

மன்னார்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மன்னார்குடியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ள காமராஜ், “மக்களின் மாற்றத்திற்கான தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்று தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைத் திரட்டும் விஜய்யின் முயற்சிக்கு அமமுக ஒரு முக்கியத் தூணாக அமையக்கூடும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தற்போது தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் தவிர்த்து, ஒரு புதிய மாற்றத்தை உருவாக்க விரும்பும் விஜய்யுடன் கைகோர்ப்பது, தங்களுக்குப் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகப் பலன் தரும் என்று தினகரன் கருதுவதாகத் தெரிகிறது. ஏற்கனவே விசிக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தவெக-விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வரும் வேளையில், அமமுகவின் இந்த நகர்வு தமிழக அரசியலில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கும் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான காமராஜ், அந்தப் பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்கிறார். அவர் தவெக-விற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், டெல்டா மாவட்டங்களில் விஜய்யின் பிடி இன்னும் வலுவடையும். குறிப்பாக, “ஆட்சிப் பகிர்வு” அல்லது “வெளிப்படையான ஆதரவு” என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அமையலாம் என்று கூறப்படுகிறது. டிடிவி தினகரனின் ஆசியுடன் காமராஜ் விரைவில் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்குச் சென்று தனது ஆதரவுக் கடிதத்தை வழங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.தமிழக வெற்றிக் கழகம் தற்போது 118 என்ற மேஜிக் எண்ணை எட்டத் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.-வின் ஆதரவும் மிக முக்கியமானதாக உள்ளது. 

error: Content is protected !!