தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக IMD வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, கரூர், திருச்சி, நாமக்கல், நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே மதுரை, தஞ்சை, ஈரோடு, அரியலூரில் பரவலாக இன்று கனமழை கொட்டித் தீர்த்தது.

