Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னரை கண்டித்து… தஞ்சையில் காங்., தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநரை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று மூன்று நாட்களாகியும் புதிய அரசு அமையவில்லை, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது, இந்நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க மறுக்கும் தமிழக கவர்னரை கண்டித்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்க மறுக்கும் தமிழக கவர்னரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர், காங்கிரஸ் கட்சியினருக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!