Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அன்பில் பொய்யாமொழியின் 72வது பிறந்தநாள்…திருச்சியில் மகேஸ் மரியாதை

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் உற்ற நண்பரும், முன்னாள் எம்எல்ஏவுமான மறைந்த அன்பில் பொய்யாமொழியின் 72-வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதனையொட்டி, திருச்சி தென்னூரில் உள்ள அவரது இல்லத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில கழக இளைஞர் அணி துணைச் செயலாளருமான அன்பில் பொய்யாமொழியின் திருவுருவப் படத்திற்கு, அவரது மகனும் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் மு. மதிவாணன் (மாநகரக் கழகச் செயலாளர்)
கே.என். சேகரன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) வன்னை அரங்கநாதன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) செந்தில் (மாநில அணி அமைப்பாளர்) மேலும், மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பகுதி, வட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் கழகச் செயலாளர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்

error: Content is protected !!