த.வெ.க தலைவர் விஜய் இன்று சட்டசபையில் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் தேமுதிக சட்டமன்ற குழுத் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், “பதவியேற்ற போது, இந்த ஆட்சி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்கள். அந்த சொல்லை காப்பாற்ற வேண்டும்.
குதிரை பேரம் நடப்பதாக சிலர் கூறியதை மனவேதனையுடன் இந்த அவையில் பதிவு செய்கிறேன். முகமூடி அணிந்து கொண்டு நான் யாரையும் சென்று சந்திக்க மாட்டேன் என்று முதல்வர் விஜய் கூறினார். ஆனால், முகத்தை மறைத்துக் கொண்டு வந்து உங்களை சந்தித்தது யார்? என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.
சிங்கப்பெண்கள் திட்டம், 717 மதுக்கடைகள் மூடப்பட்டது தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது. இன்று மீனவர்கள் பாதுகாப்புக்காக ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. ஆட்சி பொறுப்பேற்றபோது ஆட்சி வெளிப்படையாக இருக்கும், நான் ஒரு எளிமையான குடும்பம் என்று சொன்னீர்கள். ஆனால், இன்றைக்கு இங்கு குதிரை பேரம் நடந்தாக எதிர்கட்சிகள் கூறுகிறார்கள். இதை பற்றி பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஜோதிடரை அரசு வேலையில் அமர்த்தியதை வண்மையாக குறிப்பிட கடமைப்பட்டிருக்கிறேன். இதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியள்ளார்.
