Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் மாரடைப்பால் காலமானார்…

கன்னட நடிகர் திலீப் ராஜ் புதன்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

இவர் 2007- ல் வெளியான ‘மிலானா ‘ திரைப்படத்தில் புனித் ராஜ்குமாருக்கு வில்லனாக நடித்துப் புகழ்பெற்றார் . ராஜ் தனது திரைப்பயணத்தை தொலைக்காட்சியில் தொடங்கி, 2005-ல் ‘ பாய்ஃப்ரெண்ட்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் அவர் தொலைக்காட்சிக்காகத் தொடர்களைத் தயாரிக்கத் தொடங்கினார்.டோனி , ஆர்கெஸ்ட்ரா மைசூரு , யு டர்ன் , மிஞ்சகி நீ பரலு , அம்பி நீ வயசாயிட்டோ மற்றும் நிம்மா வஸ்துகலிகே நீவே ஜவாப்தாராரு ஆகியவை அவரது குறிப்பிடத்தக்க படங்களில் சில .

கடைசியாக ‘லவ் மாக்டெய்ல் 3’ படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். 

சீரியலில் இருந்து வந்த திலீப் ராஜ், திரைப்படங்களில் நடித்த பிறகு மீண்டும் சீரியலுக்கே திரும்பினார். ‘கம்பட மனே’ என்ற சீரியலில் அறிமுகமானார். பின்னர், ‘ஜனனி’, ‘ரங்கோலி’ மற்றும் சமீபத்திய வெற்றித் தொடரான ​​’ஹிட்லர் கல்யாண’ போன்ற தொடர்களின் மூலம் கர்நாடக மக்கள் மத்தியில் நன்கு பரிட்சயமான முகமாக அறியப்பட்டார்.

இந்த நிலையில் தான் இன்று அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக திலீப் ராஜ் மரணமடைந்தார். மாரடைப்பு ஏற்பட்டதும் பெங்களூரு குமாரசுவாமி லேஅவுட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். எனினும் மருத்துவர்களால் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. அவரது மரணச் செய்தி விரைவாகப் பரவியதை அடுத்து, சக ஊழியர்களும் ரசிகர்களும் மருத்துவமனையில் கூடி தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

error: Content is protected !!