பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. விலையை ஒன்றிய அரசு உயர்த்தியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.’ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கிவிட்டு பொறுத்துக் கொள்ளுங்கள் என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுகிறது. மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உதயநிதி தெரிவித்துள்ளார்
