PM மோடியின் நெதர்லாந்து பயணத்தின்போது தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வு நடந்தேறியுள்ளது. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால செப்பேடுகளை நெதர்லாந்து அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. சோழர்களின் பரம்பரை, வெற்றி குறித்த செய்திகள் அந்த செப்பேட்டில் இடம் பெற்றுள்ளன. ராஜராஜ சோழன் காலத்து ஆனைமங்கலம் செப்பேடு, 300 ஆண்டுகளாக நெதர்லாந்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
