Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நான் எப்பவுமே உங்க விஜய் தான்-முதல்வரின் எளிமை-உருகிய டைரக்டர்

தமிழக முதல்வர் விஜய்யை தலைமை செயலகத்தில் நேற்று இயக்குனர் விக்ரமன் சந்தித்தார். விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இந்தச் சந்திப்பு, மிகவும் ரகசியமாகவும் நெகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளதாக இயக்குனர் விக்ரமன் பகிர்ந்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் 

“வணக்கம்! அன்று நான் தலைமைச் செயலகத்திற்குச் சென்று முதலமைச்சர் (CM) அவர்களைச் சந்தித்தேன். எனக்கு ஒரு 12 மணி  அளவில் அழைப்பு வந்தது, ‘ஒன்றே முக்கால் மணிக்குச் செயலகம் வந்துவிடுங்கள், முதலமைச்சரைப் பார்க்கலாம்’ என்றார்கள். சரியாக ஒன்றே முக்கால் மணிக்குச் சென்றேன்.

முதலமைச்சரின் உதவியாளர் (PA) போன் செய்து, ‘ஐந்து நிமிடம் காரில் காத்திருங்கள், முதலமைச்சர் உங்களைத் தனியாகச் சந்திக்க விரும்புகிறார்’ என்றார். சொன்னபடியே என்னை உள்ளே அழைத்தார்கள். வழக்கமாக முதலமைச்சரைச் சந்திக்கச் செல்லும்போது இருக்கும் கடுமையான சோதனைகள் எதுவும் அங்கு இல்லை என்றும், உள்ளே சென்றபோது அதிகாரிகள் அல்லது செயலாளர்கள் என யாரும் இல்லாமல் முதலமைச்சர் விஜய் தனித்து இருந்ததாகவும் விக்ரமன் குறிப்பிட்டுள்ளார். விக்ரமனைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் “வாங்க சார்” என இன்முகத்தோடு வரவேற்ற முதலமைச்சர் விஜய், என் மகனைப் பார்த்து ‘ப்ரோ, எப்படி இருக்கீங்க?’ என்று நலம் விசாரித்தார். நான் அவரிடம் பல கோரிக்கைகளை வைத்தேன். 

இந்தத் தனிப்பட்ட ஆலோசனையின் போது, தமிழ் சினிமாத்துறையின் மிக முக்கிய கோரிக்கைகளை விக்ரமன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். குறிப்பாக, ‘பெப்சி’ (FEFSI) சினிமா தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக திருவள்ளூர் அல்லது செங்கல்பட்டு பகுதியில் 50 ஏக்கர் நிலமாவது அரசு சார்பில் ஒதுக்கித் தரப்பட வேண்டும் என்ற 45 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்துள்ளார். மேலும், திருமழிசைப் பகுதியில் நவீன ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளுடன் கூடிய சர்வதேசத் தரத்திலான ‘பிலிம் சிட்டி’ (Film City) ஒன்றை அமைக்க வேண்டும்  என்றேன்.

அனைத்தையும் கேட்ட அவர், உதவியாளரிடம் கூறி கோரிக்கைகளைப் பெற்றுக்கொண்டார். ‘நிச்சயமாகச் செய்கிறோம்’ என உறுதியளித்தார். இறுதியாக நான் எப்போதும் உங்கள் விஜய் தான். எந்த உதவி என்றாரலும் தவறாமல் என்னிடம் கேளுங்கள் என்று சொன்னார். முதலமைச்சரின் இந்த அதீத எளிமையை கண்டு தன் கண்களிலேயே கண்ணீர் வந்துவிட்டதாக இயக்குனர் விக்ரமன் தனது வீடியோவில்  கூறியுள்ளார்.

error: Content is protected !!