தமிழக அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் துறையின் தற்போதைய நிலை குறித்து அளிக்க வேண்டும் எனவும், மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
