Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம்- தஞ்சையில் ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனின் இல்லத் திருமண விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம். தமிழகத்தில் இன்றும் ஆட்சியில் இருப்பது திராவிட முன்னேற்றக்கழகம் தான்.திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இருக்கும் வரை, தமிழ்நாட்டை ஆள்வது திராவிட மாடல் ஆட்சிதான் என கூறினார்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை நிறைவேற்றியது திராவிட மாடல் ஆட்சிதான். சிறு பிள்ளைகளை, குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்து ஆட்சி அமைத்துள்ளனர். நாம் அனைத்து பணிகளையும் செய்து தோற்றோம்; அவர்கள் எந்த பணியும் செய்யாமல் வெற்றி பெற்றனர். வாக்காளர்களை சந்திக்காமல், முகவர்களை நியமிக்காமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். திராவிட மாடல் அரசின் திட்டங்களால் இன்றும் ஆட்சியில் இருப்பது நாம் தான்.

எந்த பணியையும் செய்யாமல் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது.சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக தான் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சிக்கு வந்துள்ளது என்றார்.

error: Content is protected !!