கோவை, சுந்தராபுரம் பகுதியில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சிடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சதாம் உசேன், பைசல், பாரூக் ஆகிய 3 பேரிடமிருந்து ரூ.36,800 மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ள நோட்டுகளை அடிக்க அச்சு இயந்திரம் வாங்கி கொடுத்த காஜா மொய்தீனிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவையில் ரூ.200 கள்ள நோட்டுகளை அச்சடித்த 3பேர் கைது
