பதவி வந்தால் ஆட்டம் போடக் கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் அறிவுரை வழங்கியுள்ளார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்றார். பதவி என்பது மக்கள் சேவைக்கான கருவி மட்டுமே. பேனர் வைத்து ஆடம்பரம் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.
