Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வராக விஜய் பதவியேற்றதற்கு கிணற்றில் மிதந்து MLA நேர்த்திக்கடன்

முதல்வர் பதவியில் CM ஜோசப் விஜய் அமர நேர்த்தி கடன் செலுத்த வேண்டுதல் முதல்வர் பதவி பெற்றதையடுத்து கிணற்று நீரில் தவெக கொடியுடன் மிதந்து ஆசனம் செய்தார் சோழவந்தான் எம்.எல்.ஏ.கருப்பையா.

மதுரை சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் கடைசி நேரத்தில் சென்று சேர்ந்து சோழவந்தான் தொகுதியில் சீட் பெற்று MLA ஆனார் கருப்பையா. இவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்க வேண்டும் பதவியேற்றால் கிணற்று நீரில் மிதற்கு ஜலபிரதட்சணம் செய்வதாக கருப்பையா அப்பகுதியிலுள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் வேண்டுதல் வைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்றதை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய தவெக MLA கருப்பையா இன்று தனது தொண்டர்களுடன் சோழவந்தான் அருகே உள்ள விவசாய கிணற்றில் தண்ணீர் கொடி பிடித்த படி 30 நிமிடம் ஜலப்பிரதட்சன ஆசணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றினார்.
வெளியே வந்த MLA கருப்பையாவிற்கு தொண்டர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது இதே போல் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு இதே போல் கிணற்று நீரில் மிதந்து ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெற்று சோழவந்தான் தொகுதியில் கடந்த 2011 ஆண்டில் MLA வாக சீட் வாங்கி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!