Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

”கருப்பு”படத்தில் இளையராஜா பெயர்-காயப்படுத்தும் எண்ணம் இல்லை

கருப்பு திரைப்படத்தில் இளையராஜா பெயர் பயன்படுத்தப்பட்ட காட்சி ஒரு தற்செயல் நிகழ்வு. 50 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகை ஆளும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணம் இல்லை. உள்நோக்கம் ஏதுமின்றி வைத்த காட்சியினால், தங்களுக்கு மனம் புண்பட்டிருந்தால் வருத்தத்தை தெரிவிக்கிறோம். இசை ஞானியின் ரசிகர்களோ, பிறரோ மனம் புண்பட்டிருந்தால் தாழ்மையான வருத்தத்தை தெரிவிக்கிறோம்’ என கருப்பு பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு திரைப்படத்தில், பாடல் காப்புரிமை தொடர்பாக இளையராஜா வழக்கு தொடர்வது குறித்து ஒரு காட்சி இடம்பெற்றிருப்பது சர்ச்சையான நிலையில் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

error: Content is protected !!