கரூர் மாவட்டம், கொளந்தானூர் பகுதியைச் சேர்ந்த வீரமுரசு மற்றும் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த மஞ்சு ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு குடும்பத்தினரும் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரும் தங்களது விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, இன்று காலை தாந்தோன்றிமலை பெருமாள் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் திருமணம்

ய்து கொண்டனர். அதனை தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க தஞ்சம் அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
சமூக வேறுபாடு காரணமாக எங்கள் திருமணத்திற்கு இரு குடும்பங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி திருமணம் செய்து கொண்டோம். பெண் தரப்பில் எங்களை மிரட்டி வருகின்றனர்.
கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைப் போலவே ஆணவக் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அரசு எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
இச்சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை தரப்பில் மனு பெறப்பட்டு, தேவையான விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
