கரூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மன் கம்பத்திற்கு தீர்த்தம் மற்றும் பால்குடம் உள்ளிட்டவைகளை உற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு

கடந்த 10ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்வுடன் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இன்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனுக்கு பால்குடம், தீர்த்த குடம்

எடுத்தும், தேங்காய் பழம் வழிபாடு செய்து வருகின்றனர்.
ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது நேர்த்தி கடனை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து 24 முதல் 26-ஆம் தேதி வரை மாவிளக்கு,பால்குடம், அக்னி சட்டி, அலகு, காவடி மற்றும் கரும்புத் தொட்டில் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செய்ய இருப்பதால் அமராவதி ஆற்றில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது முதல் நடைபெற்று வருகிறது.
திருவிழாவில் முக்கிய நிகழ்வாக வருகின்ற 27ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
