முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் வாக்குப்பதிவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோரை முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இப்புகாரின் அடிப்படையில், சென்னை வடக்கு கடற்கரை காவல்துறையினர் சேகர்பாபு மீது 4 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
