த.வெ.க அமைச்சரவையில் விசிக இடம்பெற்ற நிலையில் திமுக எம்.பி ஆ.ராசா, “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’, வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்…” என்று விசிகவை கடுமையாகச் சாடியிருந்தார்.
ஆனால் ஆ.ராசா இந்தப் பதிவை உடனே நீக்கிவிட்டார். அவரின் இந்தப் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா,
இந்தியாவே பார்த்து வியக்கக்கூடிய அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறோம்.பெரும்பான்மை இல்லாதபோது அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால் நாங்கள் ஆட்சி அமைத்திருக்க முடியும். மதச்சார்பற்ற கொள்கையில் நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று உறுதியாக நின்றோம்.
புதிய அமைச்சரவையில் வி.சி.க இடம்பெற்றதை தி.மு.க விமர்சிப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், தி.மு.க-விடம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது தற்போது இல்லாமல் போய்விட்டது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் நாகரிகமற்ற முறையிலும் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா, வி.சி.க தலைவர் தொல். திருமாவளவனிடம் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பெண்களைக் கொச்சைப்படுத்திப் பேசிய ஆ.ராசாவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
