Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேசத்தினருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கரைப்புதூர் பகுதியில் தனியார் பனியன் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கி வேலைசெய்த வங்க தேசத்தினர் 25 பேரை பல்லடம் போலீசார் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சுரேஷ், வங்க தேசத்தினர் 25 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

error: Content is protected !!