கரூரில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு நாமக்கல்லில் இருந்து கரூர் வந்த அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் வாங்கலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றைய தினம் கரூர் மாநகராட்சி ராயனூரில் நடைபெறும் அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.267.43 கோடி மதிப்பீட்டில் 1,22,019 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். 


