Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அஜித் குமாரின் தாயார் மறைவு… முதல்வர் விஜய் இரங்கல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தாயார் திருமதி மோகினி மணி (வயது 79) அவர்கள் காலமானதை ஒட்டி, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் கூறியிருப்பதாவது.. “நடிகர் அஜித் குமார் தாயார் மோகினி மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.

அன்பான தாயாரை இழந்து வாடும் நண்பர் அஜித் குமார் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மோகினி அமை்மையார் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார் முதல்வர் விஜய்.

அஜித்தின் தாயார் மோகினி மணி அவர்கள் கடந்த சில காலமாகவே வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அஜித் குமார் மறைவுக்கு திரையுலகினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!