Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு ரிலீஃப்-சிவசங்கர்

நடிகர் விஜய், முதலமைச்சர் விஜய் ஆனதையே மறந்து விட்டார்: இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகள் தான், எங்கள் மன இறுக்கத்திற்கு மிகப்பெரிய ரீலீஃப் என முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா அரியலூர் மாவட்ட திமுக சார்பில், மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட திமுக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்ததான முகாமில், இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டிய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நடிகர் விஜய், முதலமைச்சர் விஜய் ஆனதையே மறந்துவிட்டார். நன்றி அறிவிப்பு கூட்டம் என்ற பெயரில், தேர்தல் பிரச்சாரக் கூட்டமாக உரையாற்றினார். தினமும் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்திருப்பது மாத்திரமே முதலமைச்சரின் பணி என, விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

24 மணி நேரமும் தமிழ்நாட்டின் நிலையை கண்காணித்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். அதற்கு உதாரணமாக செயல்பட்டவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். எந்த நிமிடத்திலும் எந்த அமைச்சரும், அதிகாரிகளும் முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்புகொண்டு ஆலோசனை பெறுவர்.

அச்சு காட்சி ஊடகங்கள் சமூக வலைதளங்களில் வருகின்ற செய்திகளை அவரே கண்காணித்து, என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரையை எங்களுக்கு வழங்குவார். ஆனால் இன்றைய முதலமைச்சரோ, காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்வதையே முதலமைச்சர் பணியாக கருதுகிறார்.

மாலை நேரத்தில் விஜய் வீட்டுக்கு சென்ற பின்னர், அவரது கட்சிக்காரர்கள் கூட சந்திக்க முடியாத நிலை உள்ளது. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? என்பதை யாருக்கும் தெரியாத நிலை உள்ளது. மிகக்குறிப்பாக சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

இதை எதிர்க்கட்சி என்ற முறையில் நாங்கள் கூட அதிகம் விமர்சிக்க தொடங்கவில்லை. மக்கள் களத்திலிருந்து விமர்சிக்க தொடங்கி விட்டனர். சென்னையில் 24 மணி நேரமும் மின்சாரம் இன்றி சாலைகளில் தவெகவுக்கு வாக்கு கேட்ட பெண்கள்கூட, கைக்குழந்தையிடம் உலா வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவுகிறது.

பொதுமக்களே களத்தில் இறங்கி போராடும் சூழலில், விஜய் இன்னமும் அவகாசம் கேட்கிறார். அவகாசம் கேட்பது என்பது புதிய திட்டங்கள் அறிவித்து நிறைவேற்றுவதற்காக தான். மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அல்ல.

சட்டம் ஒழுங்குக்கு பங்கம் விளைவிப்பது தவெகவினர்தான். எந்த குற்றங்களை திமுக மீது சுமத்தி ஆட்சிக்கு வந்தார்களோ? அந்த பாலியல் குற்றங்களை தவெகவினரே செய்யும் செய்தி தினம்தோறும் வருகிறது.

ஆட்சி பொறுப்பு என்பது கிரீடம் என விஜய் நினைத்துக் கொண்டுள்ளார். அது முள்கிரீடம். அதை உணர்ந்து முதலமைச்சரும், அமைச்சரும் செயல்பட வேண்டும்.

விஜய் திருச்சியில் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய தொனியை பார்க்கும்போது அவர் இன்னமும், கத்தி மற்றும் தெறி படத்தில் நடித்ததை போன்று நினைத்துக் கொண்டுள்ளார். வாயில் வந்திடும் எனவும், நான் என்ன ? என டேஷ் போட்டு பேசுகிறார். அவற்றையெல்லாம் நிரப்பினால் மிக தரக்குறைவாக இருக்கும்.

தவெக விர்ச்சுவல் வாரியர்சே இதை கண்டித்து ரீல்ஸ் போடுகின்றனர். வெளி உலக தொடர்பே இல்லாத காரணத்தினால் விஜய்க்கு இது எதுவும் தெரியவில்லை. விஜயின் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் என்ன எழுதி தருகின்றனரோ, திரைப்படம் போன்று ஆக்சன், ரோல் சொன்னதும் ஒப்பிக்க தொடங்குவாரோ, அதேபோன்று மேடைகளிலும் தற்பொழுது வந்து ஒப்பித்து செல்கிறார் விஜய்.

அப்போதும் சில வார்த்தைகள் தடுமாறி அது தூர்ந்து போன சக்தி என பேப்பரை பார்த்து என்று சொல்கிறார். விஜய் மனதில் இருப்பதை பேச முன் வந்தால் மட்டுமே மக்களின் நிலை உணர்ந்து பேச முடியும். எவரோ எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட் ஐ பேசினால் வீட்டில் சென்று ஓய்வு தான் எடுக்க முடியும்.

தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதி இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு…

மதிமுக துவங்கியது துரதிஷ்டவசம்தான். அவர் காலம் முழுக்க துரதிஷ்டவசமாகவே செல்கிறது அவர்தான் அது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

தவெகவின் போக்குவரத்து துறையின் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு…

இந்த ஆட்சி அமைந்த உடனேயே இப்படிப்பட்ட முடிவு வந்துவிட்டது என மன அழுத்தத்தில் எல்லோரும் இருந்தோம். தற்பொழுது எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய ரிலீஃபே இந்த அமைச்சர்கள் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நாங்கள் ரிலாக்ஸ் செய்யும் வாய்ப்பை தவெக அமைச்சர்கள் தந்துள்ளனர்.

அதில் ஒவ்வொரு அமைச்சரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் அதில் போக்குவரத்து துறை அமைச்சரும் ஒரு மதிப்பெண் பெற்றுள்ளார். இன்னும் அவர்களின் பணியை பார்க்க வேண்டி உள்ளது அதனால் அவசரப்பட்டு விமர்சிக்க விரும்பவில்லை.

error: Content is protected !!